Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

காணிக்கைப்பாடல்கள்  -காணிக்கை தர வந்தோம்  

காணிக்கை தர வந்தோம் தந்தோம் (2) எங்கள்
சிந்தை மகிழ்வுடன் தந்தை இறைவனுக்கு
காணிக்கை தர வந்தோம் தந்தோம்

கோதுமை மணியும் திராட்சைக் கனியும்
காணிக்கைப் பொருளாய் தர வந்தோம்
உம் திருமகனின் உடலும் உதிரமும் (2)  இடையிசை
எம் திரு உணவாய்ப் பெற வந்தோம் (2)
இறைவன் என்றும் போற்றி போற்றி

நிலமதன் விளைவும் மானிட உழைப்பும்
நன்றியின் பயனாய்த் தர வந்தோம்
வளமையும் வாழ்வும் நலன்கள் யாவும் (2) -இடையிசை
நின் அருட்கொடையாய் பெற வந்தோம் (2)
இறைவன் என்றும் போற்றி போற்றி



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்