காணிக்கைப்பாடல்கள் | -காணிக்கை ஒன்று கரங்களில் கொண்டு |
காணிக்கை ஒன்று கரங்களில் கொண்டு வந்துவிட்டேன் இறைவா என் ஊன்சதை சுருக்கி உள்ளத்தை உருக்கி தாரை தந்தேன் இறைவா 3 திருவுளம் கொண்டு திருநகர் சேர்ப்பீர் இறைஞ்சினேன் என் இறைவா அந்த ஒரு உளம் போதும் ஆயிரம் நன்றி காணிக்கை என் இறைவா ஆயிரம் பலிகள் நான் படைத்தாலும் தகனங்கள் வேண்டாமே நீர் விரும்பிடும் ஆன்மா உமக்கே சொந்தம் கொடுத்தேன் என் இறைவா -3 கண்ணிகள் வைத்து கலகங்கள் செய்யும் மனங்களே கல்லறைகள் - பல புன்மைகள் கோர்த்து புரோகிதம் பண்ணும் இதயமே இருட்குகைகள் நன்மைகள் ஒன்றே மாலையாய் தொகுத்து மலரடி அர்ப்பணமே பொய் தின்மைகள் அகற்றி சிறுமைகள் விரட்டி திருவருள் புரிவீரே - 3 |