காணிக்கைப்பாடல் | -கனிந்த அன்பின் வடிவிலே |
கனிந்த அன்பின் வடிவிலே கருணை சொல்லும் பலியிலே பணி புரிந்திட வருகின்றேன் பணிந்து என்னை தருகிறேன் - பதம் பணிந்து என்னை தருகிறேன் தேவையறியும் ஆற்றலும் தேடியலையும் ஊக்கமும் சேவை புரியும் கரங்களும் சேர்ந்து மகிழும் மனங்களும் தலைவன் விரும்பும் காணிக்கை தந்திட வந்தேன் நானெனை (2) தந்திட வந்தேன் நானெனை அன்பில் வளரும் இதயமும் அருளில் விரியும் பயணமும் உழைப்பில் வியர்வை துளிகளும் அழைப்பில் சேர்க்கும் மொழிகளும் தலைவன் விரும்பும் காணிக்கை தந்திட வந்தேன் நானெனை (2) தந்திட வந்தேன் நானெனை |