காணிக்கைப்பாடல்கள் | -என்னை தருவேன் உமக்காக |
என்னை தருவேன் உமக்காக உம்மில் இணைவேன் பலியாக நொறுங்குண்ட இதயத்தை விரும்பிடும் தெய்வமே உடைந்திட்ட உள்ளமதை நாடிடும் அன்பரே உமக்காய் உம்மில் வாழ ஆசிக்கின்றேன் ஆபேலை போல ஆர்வமாய் தருவேன் கைம்பெண்ணை போல முழுமையாய் தருவேன் சிறந்தது எதுவோ அதையே தருவேன் இருப்பதை உவந்தே உமக்கே தருவேன் என்னையே முழுவதும் தருகின்றேன் உமக்காய் வாழ விழைகின்றேன் ஆபிரகாம் போல தயங்காது தருவேன் யோபுவை போல அனைத்தையும் இழப்பேன் முழுமை எதுவோ அதையே தருவேன் வாழ்வின் பயனை நிறைவாய் தருவேன் என்னையே முழுவதும் தருகின்றேன் உமக்காய் வாழ விழைகின்றேன் |