காணிக்கைப்பாடல்கள் | என்னைத் தருகிறேன் இயேசு தெய்வமே |
என்னைத் தருகிறேன் இயேசு தெய்வமே என்னை முழுதும் உமக்கு தருகிறேன் - 2 உனக்காக நானும் வாழ்ந்திடவே 2 பலியெனவே அன்பில் இணைந்திடுவேன் -2 ஆபேல் தந்த காணிக்கைப் போல ஆர்வமாய் நானும் தருகிறேன் ஏழைக் கைம்பெண் தந்தது போல எளியவள் நான் என்னைத் தருகிறேன் -2 அடியேன் எனை ஏற்றிடுவாய் அன்புருவாய் மாற்றிடுவாய் 2 உள்ளம் வாழ உணவாய் மாறும் உனது தியாகம் உயர்ந்ததல்லவா உயிரை அளிக்கும் அன்பைப் போல உயர்ந்த அன்பு உலகில் இல்லையே -2 உனதன்பை வாழ்ந்திடவே பலிப்பொருளாய் மாறிடவே 2 |