காணிக்கைப்பாடல்கள் | - அர்ப்பணமாகினேன் உன் அன்பினிலே |
அர்ப்பணமாகினேன் உன் அன்பினிலே அர்ப்பணித்தேன் என்னை அருளினிலே ஏற்றிடுவாய் என் இயல்பினிலே மாற்றிடுவாய் உன் உறவினிலே தாய் தந்தை அன்பு உயர்வானது -உந்தன் பேரன்பு அதனிலும் மேலானது (2) மொழிகளில் வார்த்திட இயலாதது எந்தன் விழிகளில் திவலை ஏன் துளிர்க்கின்றது விழிகளில் திவலை ஏன் துளிர்க்கின்றது எத்தனை ஆயிரம் நன்மைகளால் -ஐயா ஏழை என் வாழ்வினை அலங்கரித்தாய் (2) என் உடல் பொருள் ஆவி உவந்தளித்தேன் -எந்தன் இன்னுயிர் உள்ளவரை உமைப் புகழ்வேன் இன்னுயிர் உள்ளவரை உமைப் புகழ்வேன் |