Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

காணிக்கைப்பாடல்கள் விடியல் ஏந்தும் தீபங்கள்  


விடியல் ஏந்தும் தீபங்கள் தலைவன் இயேசு சீடர்கள்
ஒருடலாய் மாறும் தூய பலியிது
தியாக நினைவினை வாழும் வழியிது
வாழ்வின் பொருளினை உணரும் மொழியிது
இணைந்திட இறைவன் இல்லம் அழைக்குது
கடலில், கரையும் நதிகள் நாம்
கொடியில் இணையும், கிளைகள் நாம்
இறைவன் அரசின் கனவுடன்
இனிதரய் இணைவோம்

ஒரே ஆவி பொழிவதால் ஒரே அழைப்புப் பெறுவதால்
ஒரே தந்தை பிள்ளையாக மரறும் நாளிது
ஒரே பலியில் இணைவதால் ஒரே உணவை பகிர்வதால்
ஒரே, குடும்பம் உலகம் என்று மகிழும் நாளிது
ஒரே உன்ளம் தருவதால் ஒரே எண்ணம் எழுவதால்
நெஞ்சமே கோயிலாக மலருது
மண்ணிலே இறைவன் பாதம் தெரியுது

ஒரே ஆயன் அழைத்ததால் ஒரே மந்தை ஆனதால்
ஒரே மாண்பு உன்னில் என்னில் வளரச் சொல்லுது
ஒரே வார்த்தை கேட்பதால் ஒரே இரத்தம் மீட்பதால்
ஒரே பணியில் இணையும் கைகள் உலகை வெல்லுது
ஒரே அன்பில் உறைவதால் ஒரே அமைதி நிறைவதால்
வெள்ளமாய் நீதி மண்ணில் வழியுது
விண்ணகமும் ஆசி நம்மில் பொழியுது


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்