Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

காணிக்கைப்பாடல்கள் வந்தோம் தந்திடவே தந்தாய்  

வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்
எம் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம்
அன்பாய் ஏற்றிடுவாய்

இறைவா உன்னில் இணையா வாழ்வு
இருந்தும் பயனென்ன
இகத்தில் நீ தந்த வாழ்வைத் தந்தால்
எனக்கு இழப்பென்ன ஆ
இனி வாழும் காலம் இனிதாக வேண்டும்
இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும்

இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னைத் தேடுதே
உன்னில் இணைந்து உயிர் பெறவே விரைந்து நாடுதே
உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து
இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்