Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

காணிக்கைப்பாடல்கள் வாழ்வின் தோட்டத்தில்  


வாழ்வின் தோட்டத்தில் வகைவகையான
வண்ணமலர்கள் கண்டேன் - அதில்
சிறந்த மலர்களை மகிழ்வுடன் பறித்து
மாலை ஒன்று தொடுத்தேன் (2)
மாலையே உமது பீடத்தின் காட்சியாய் ஏற்றிடுவாய் இறைவா -2
ஏற்றிடுவாய் இறைவா

உறவுகள் என்னும் உன்னதப் பூக்கள்
வாழ்வினில் மலரச் செய்தாய் (2)
வாழ்வினில் மலரச் செய்தாய் - அவை நறுமணம் கமழ்ந்து
நாவினால் இன்பம் பெருகிடவே செய்வாய் -2

தொடர்ந்திடும் பணியில் உடனிருப்பவர்க்கு
தோழமைக் கரங்கள் தந்தாய் (2)
தோழமை கரங்கள் தந்தாய் - நான் சோதனை வேளையில்
துவண்டு விழாமல் துணிவுடன் நடக்கச் செய்தாய் -2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்