காணிக்கைப்பாடல்கள் | உருகும் மெழுகாய் |
உருகும் மெழுகாய் உலகில் வாழ இறைவா உன் பீடம் வருகின்றேன் காணிக்கையாய் என்னைத் தருகின்றேன் தியாகமே வாழ்வாய் மாறட்டும் மாறட்டும் புனிதமே மலராய் மலரட்டும் மலரட்டும் அலைகளாக வந்து எழும் அலைக்கழிக்கும் துயர் நிலைகள் நிறைவு தரும் உம் நிழலில் நிறைவாழ்வு நிதமடையும் நிலையான மனம் தருவாயே இறைவா இறைவா ஆழ்கடலின் அமைதியைத் தருவாய் அருவியாக வந்து விழும் அளவில்லாத உம் கொடைகள் மனதினிலே நிறைந்து நின்று புது வாழ்வில் மகிழ்வடையும் கனிவான நிலை அருள்வாயே இறைவா இறைவா ஆழ்கடலின் அமைதியைத் தருவாய் |