காணிக்கைப்பாடல்கள் | உனை நினைத்து உளம் கனிந்து |
உனை நினைத்து உளம் கனிந்து பரமனே உந்தன் பாதம் வந்தேன் மலர் தொடுத்து மனம் படைத்து இறைவனே உந்தன் மடி சாய்கின்றேன் வாழ்வும் வளமுமே நீ தந்தாய் பழியும் பாவமும் நான் தந்தேன் உறவும் வரமுமே நீ தந்தாய் நாளும் பொழுதும் உன்னை மறந்து வாழ்வில் தொலையும் என்னையே பலியென ஏற்றிடாய் பாவி என்னை மாற்றிடாய் சரிந்திடும் பூமாலை விழுந்திடும் உன் பாதம் படையலாய் ஏற்றிடு என் இறைவா மனம் ஏங்குதே உனைத் தேடியே பரமனே உந்தன் பாதம் வந்தேன் மலர் தொடுத்து மனம் படைத்து இறைவனே உந்தன் மடி சாய்கின்றேன் குறையும் குவளையுத் நான் தந்தேன் நிறையும் இரசமாய் நீ தந்தாய் பற்றிடா அப்பத்தை நான் தந்தேன் பல்கி பெருக்கி அதை நீ தந்தாய் கனவு தினவு என்னை நிறைத்து உறவு உயர்வு தந்திடும் உனையே தேடிடும் மனம் தந்திடாய் தேவை பலியாய் ஏற்றிடாய் எரிந்திடும் மெழுகென உருகிடும் எனை உன் பலியாய் ஏற்றிடு என் இறைவா |