காணிக்கைப்பாடல்கள் | தருவேன் காணிக்கை என்ன |
தருவேன் காணிக்கை என்னை முழுமையாகவே - மனம் தருவேன் காணிக்கை என்னை முழுமையாகவே இங்கு மலராய் மலர்ந்து உன்னில் உயிராய் கலந்து வருவேன் உன் அன்பில் இணைந்து குறைகளால் நிறைந்த என் உள்ளக்கறை நீக்குமே (2) இறைவா வருவாய் என்னுள்ளம் உன்னில்லம் அறிந்தேன் (2) உள்ளத்திலே உள்ளதெல்லாம் உனக்காய் தினம் கொடுப்பேன் (2) இரசத்துடன் நீர்த்துளி போல் எனைச் சேர்த்து உன் இரத்தமாக்கும் (2) அப்பத்தில் எழுவாய் மாற்றிடு நல்திரு உணவாய் (2) என்னிடத்தில் ஏதுமில்லை உன்னிடம் என்னை அளிப்பேன் (2) |