காணிக்கைப்பாடல்கள் | தருகின்றோம் தருகின்றோம் |
தருகின்றோம் தருகின்றோம் எம்மை அன்பின் காணிக்கையாக அன்பினில் இணைந்து அன்பியமாய் உம் கரங்களில் எம்மைத் தருகின்றோம் உம்திரு உடலும் அப்பதில் வடிவில் உருமாற்றம் பலியில் ஆகியதே உம் இரத்தமே கனி இரசமாய் மாந்தர் எமக்காய் மாறியதே உம்மைப் போல எம் வாழ்வை அர்ப்பணமாய் தருகின்றோம் பாசத்தோடும் நேசத்தோடும் அன்பியமாய் வருகின்றோம் தியாகத்தின் ஊற்றாய் கல்வாரி மலையில் உம் உயிர் சிலுவையில் தந்தாயே திருப்பலியில் மறுபடியும் உயிராய் எம்மில் கலந்தாயே உம்மை ஏற்ற எம் வாழ்வும் புத்துயிரும் பெற வேண்டும் இன்பத்திலும் துன்பத்திலும் அன்பியமாய் வர வேண்டும் |