காணிக்கைப்பாடல்கள் | தந்தேன் பலியினில் |
தந்தேன் பலியினில் எனைத் தந்தேன் - என் தந்தையே உன்னில் சரணடைந்தேன் நிலையான உறவில் நிலை பெறுவேன் (2) நிறைவாய் வாழ்ந்திடுவேன் இதயம் என்னும் அப்பம் செய்து - அதில் அன்பு என்னும் இரசம் கலந்தேன் உன் பலியில் நான் பலியாக உள்ளத்தை உடைத்து விட்டேன் தியாகம் என்னும் தீபம் கண்டேன் - அதில் சுயநலத்தை தகனம் செய்தேன் பொதுப்பணியில் நான் பலியாக என்னையே உனக்களித்தேன் |