காணிக்கைப்பாடல்கள் | பலியில் கலந்திடும் நேரம் |
பலியில் கலந்திடும் நேரம் - இது புனிதம் மிகுந்திடும் நேரம் விந்தை புரிந்திடும் தந்தையே எதை நான் பலியென தருவது சிந்தை முழுதும் உந்தன் நினைவே எதை நான் பலியென தருவது உமது சாயல் உயிரின் சுவாசம் உலகில் வாழ்ந்திட தந்துள்ளீர் உம்மை புகழ உள்ளம் மகிழ உமது பிள்ளையாய் தேர்ந்துள்ளீர் எதை நான் பலியென தருவது - மனம் தரையில் மீன் என தவிக்குது விழியில் பார்வை மொழியில் ஓசை எழிலும் சேர்ந்திட தந்துள்ளீர் எண்ணம் உயர நன்மை புரிய உமது சொந்தமாய் தேர்ந்துள்ளீர் எதை நான் பலியென தருவது - மனம் புயலில் பூவாய்த் தவிக்குது |