காணிக்கைப்பாடல்கள் | பலியாக எதை உனக்கு |
பலியாக எதை உனக்கு தருவேன் இன்று - இந்தப் படைப்பெல்லாம் நீதானே படைத்தாய் அன்று எனையே நான் உனக்களித்தேன் இறைவா இன்று உருமாற்றி உனதாக்கி தருவான் இன்று தந்தேன் தந்தேன் தந்தேன் எனையே இறைவா தருவாய் தருவாய் தருவாய் உள் அருளே இறைவா கோதுமை மணியும் திராட்சைக் கனியும் புதிதாக மாற்றம் பெறுவதுபோல் நொறுங்குண்ட உள்ளத்தை நான் தருகின்றேன் நலமாக்கிப் புதிதாக்க தாள் பணிகின்றேன் கொடுப்பதில் இன்பம் பெறுவதில் இல்லை குறைவின்றிக் கொடுத்து நான் வாழ்ந்திடவே மனமுவந்து எனையே நான் உமக்களிக்கின்றேன் தினம் தினம் நான் உண்ணுகையில் மகிழ்ந்தளிக்கின்றேன் |