Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

காணிக்கைப்பாடல்கள் நாங்கள் வான ஞானியர்  

நாங்கள் வான ஞானியர்
மூவராக வருகின்றோம்
கையில் உண்டு காணிக்கைகள்
முன் செல்லும் நட்சத்திரம்
ஓ...ஓ...வழியைக் காட்டும் நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
இயேசு பாலன் வாழும் இல்லம்
அழைத்துச் செல்லும் நட்சத்திரம்


பொன்னை நானும் ஏந்திவந்தேன்
கிரீடம் சூடும் அரசரே
உந்தன் பாதம் பணிந்து நானும்
வைக்கின்றேன் காணிக்கை
ஓ...ஓ...வழியைக் காட்டும் நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
இயேசு பாலன் வாழும் இல்லம்
அழைத்துச் செல்லும் நட்சத்திரம்

வெள்ளைப்போளம் கொண்டு வந்தேன்
பாவம் தீர்க்கும் பலி ஆடே
எந்தன் பாவம் தீர்க்கும் உமக்காய்
வைக்கின்றேன் காணிக்கை
ஓ...ஓ...வழியைக் காட்டும் நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
இயேசு பாலன் வாழும் இல்லம்
அழைத்துச் செல்லும் நட்சத்திரம்

தூபவர்க்கம் தாங்கி வந்தேன்
தெய்வம் நீரென அறிவிப்பேன்
எந்தன் வாழ்வை மாற்றும் உமக்காய்
வைக்கின்றேன் காணிக்கை
ஓ...ஓ...வழியைக் காட்டும் நட்சத்திரம்
ஆச்சரிய நட்சத்திரம்
இயேசு பாலன் வாழும் இல்லம்
அழைத்துச் செல்லும் நட்சத்திரம்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்