காணிக்கைப்பாடல்கள் | மணமலராய் ஒளிச்சுடராய் |
மணமலராய் ஒளிச்சுடராய் நறும் புகையாய் தரும் அஞ்சலியில் அருள் கொடையாய் எமக்கீந்த வாழ்வையும் தரவந்தோம் உனதருட் பணிதனை தினம் மிகத் தொடர உறவினராய் எமைத் தேர்ந்தாயே உள்ளத்தில் உறைந்த உண்மைக்குச் சான்றாய் உலகினில் வாழ்ந்திடப் பணித்தாயே இறையுள்ளம் மனமுணர்ந்து பிறரன்புப் பணியாற்ற இதயமாய் இருந்தெமை இயக்கிடத் தந்தோம் உயர்வரமாய் எமக்குயிர் வரம் தந்து உன்திரு சாயலை உருக்கொடுத்தாய் உள்ளதைப் பிறர்க்கென பகிர்ந்தே மகிழும் உன்னத உணர்வும் உவந்தளித்தாய் இறையுன் அருள் மொழியின் ஒலிதனில் வழிகாண இயக்கமாய் இணைந்தே பலிதர வந்தோம் |