காணிக்கைப்பாடல்கள் | காற்றாய் முகிலாய் எழுந்தவா |
காற்றாய் முகிலாய் எழுந்தவா கருணைக்கடலாய் அமைந்தவா பொன்னும் பொருளும் தந்தவா உம் அன்பால் எம்மை அழைத்தவா உமக்கே எம் இதயக் காணிக்கை உமக்கே எம் வாழ்வின் காணிக்கை பலியில் உனது அருள் வரும் பணியில் உனது துணை வரும் பகிரும் மனது நிறைவு தரும் பாச உணர்வு அமைதி தரும் இதயம் மகிழ்ந்து உன்னில் கலந்து எம்மை முழுதும் உமக்கே தருகின்றோம் வானும் புவியும் உன் அழகே நதியும் வளமும் உன் அருளே இடியும் இசையும் உன் குரல் வியப்பைத்தருவதுன் செயல் இதயம் மகிழ்ந்து உன்னில் கலந்து எம்மை முழுதும் உமக்கே தருகின்றோம் |