காணிக்கைப்பாடல்கள் | காணிக்கை தந்தேனே இறைவா |
காணிக்கை தந்தேனே இறைவா - இதய காணிக்கை தந்தேனே இறைவா உந்தன் அருளோசை நிறைகின்ற திருக்கோயில் நிழல் தன்னில் 1. சுனை மலரும் சுவை நீரைப் போலே எங்கள் மனம் மேவும் தூயவர் நீதானே மின்னும் சுடர் சிதறும் ஒளி பூவைப் போலே எங்கள் இடர் நீக்கும் மேய்ப்பரும் நீ தானே கல்வாரி மலை தன்னில் அன்றே உலகைக் காத்திட உதிரத்தை ஈந்தீரே அதனால் 2. வலியோன் திடம் தன்னை வீழ்த்தி கலங்கும் எளியோன் தாகத்தைத் தணித்தீரே உதிரும் இலைபோல வீழ்ந்தோரை தேற்றி அமுத அலையாகப் பேரருள் தந்தீரே அன்றே முள்முடி திருக்காயம் ஏற்றே மக்கள் பாவத்தைச் சுமந்திட வந்தீரே அதனால் |