காணிக்கைப்பாடல்கள் | காணிக்கை மலராய் உன் பதம் |
காணிக்கை மலராய் உன் பதம் வந்தேன் கனிவுடன் ஏற்பாய் கருணையின் இறைவா எளியோர் வறியோர் கொணர்ந்திடும் காணிக்கை மகிழ்வுடன் உந்தன் கரங்களில் தந்தேன் கோதுமை மணியும் தேன் கனி இரசமும் தியாகத்தின் துளியாய் உன்னோடு கலந்தேன் பரிவோடு உந்தன் பலியோட சேர்த்து பரம் பொருளே உன்னில் பலன் தர வந்தேன் நிறைவாழ்வுக்காக ஏற்றிடு இறைவா வாழ்வின் சுமையும் வளர்ந்திடும் பகையும் இனி எல்லாம் உலகை நிதம் காண அருள்வாய் விண்னோடும் மண்ணோடும் உறவாடும் பலியில் நான் என்றும் உனக்காக மெழுகாகக் கரைவேன் உவப்போடு என்னை ஏற்றிடு இறைவா |