காணிக்கைப்பாடல்கள் | காணிக்கை கொண்டு வந்தேன் |
காணிக்கை கொண்டு வந்தேன் என்னையே தருவேன் இறைவா அப்பமும் இரசமுமாய் உம்மிடம் வருகின்றேன் உலகத்தின் இறைவா நீர் வாழ்த்தப் பெறுவீராக ஏனெனில் உம் வல்லமையால் அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம் நிலத்தின் விளைவையும் மனித உழைப்பையும் வாழ்வளிக்கும் அப்பமாக மாற்றிட வேண்டுகின்றோம் இறைவன் வாழ்த்தப் பெறுவாராக என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக உலகத்தின் இறைவா நீர் வாழ்த்தப் பெறுவீராக ஏனெனில் உம் வல்லமையால் இரசத்தைப் பெற்றுக்கொண்டோம் திராட்சைக் கொடியையும் மனித உழைப்பையும் ஆன்மீக பானமாக மாற்றிட வேண்டுகின்றோம் இறைவன் வாழ்த்தப் பெறுவாராக என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக |