காணிக்கைப்பாடல்கள் | காணிக்கை கொண்டு வந்தேன் |
காணிக்கை கொண்டு வந்தேன் இறைவா கனிவுடன் ஏற்றருள்வாய் என்னிடம் உள்ளதெல்லாம் இறைவா உனக்கென தருகின்றேன் இதை ஏற்பாய் இறைவா திருப்பலிதனில் ஏற்பாய் என்னை முழுவதும் உவந்தளித்தேன் மலர்கள் கொண்டு வந்தேன் மலர் போல் மணம் வீச கனிகள் கொண்டு வந்தேன் கனி போல் சுவை கொடுக்க என்னையே கொண்டு வந்தேன் - 2 ஏற்றருள்வாய் இறைவா ஒளியினை கொண்டு வந்தேன் சுடராய் ஒளிவீச கரங்கள் விரித்து வந்தேன் என்னையே உமக்களிக்க அனைத்தையும் தருகின்றேன் - 2 ஏற்றருள்வாய் இறைவா |