காணிக்கைப்பாடல்கள் | இதயம் நிறைந்த காணிக்கை |
வார்த்தை வாழ்வாக எமைத் தந்தோம் இறைவா வாடும் புவி மாந்தர் நிலை மாறவே ஸரிகமா மகரிமா ஸகநிதபா ஸகனிபா இதயம் நிறைந்த காணிக்கை தந்தோம் ஏற்பாய் இறைவா ஏற்றிவாயா மலரும் மணமும் குறையும் நிறையும் எடுத்து வந்தோம் அர்ப்பணம் தந்தோம் வறியோர் வாழ்வும் எளியோர் உழைப்பும் அளித்தோம் அன்பாய் ஏற்பாயே பலியின் பொருளாய் பணியில் பலியாய் பகிர்ந்து மகிழ்வோம் காணிக்கையாக வார்த்தை வாழ்வாக - எமை திராட்சை ரசமாய் மாற்றிடுவீரே உழைப்பின் பயனில் அப்பமும் ரசமும் விரும்பி ஏற்பாய் அர்ப்பணமே பசித்தோர் வாழ்வும் புசித்தோர் உயர்வும் அளித்தோம் பலியாய் ஏற்பாயே தியாக வாழ்வில் சுடரும் ஒளியாய் எம்மையே தருவோம் காணிக்கையாக வார்த்தை வாழ்வாக - எமை கோதுமை மணியாய் மாற்றிடுவீரே உண்மையல்ல உறவின் மலராய் அளித்தோம் இறைவா அர்ப்பணமே |