காணிக்கைப்பாடல்கள் | இறைவனின் பாதம் இணைந்திடும் |
இறைவனின் பாதம் இணைந்திடும் நேரம் இதயத்தின் காணிக்கை உவந்தளித்தேன் ஏற்றிடுவாய் எனை மாற்றிடுவாய் ஏழையென் காணிக்கை ஏற்றிடவே இதயத்தின் கண்கள் உனைத் தேடும் - என்றும் இறைவா உந்தன் பதம் நாடும் நினைவெனும் கோவிலில் நிதமொரு பலியினை நிம்மதி தேடி நான் தொழுதேன் என் மனமென்னும் தோட்டத்தில் மகிழ்ந்திடும் இறைவா மனங்களைக் காணிக்கை உமக்களித்தேன் பீடத்தில் என் மனம் பலிப்பொருளாய் - என்றும் இறைவா உந்தன் புகழ் பாடும் உன் அன்பனும் ஆழியில் அனுதினம் சேர்கையில் சுடர் விடும் விளக்காய் நான் ஒளிர்வேன் உன் வியத்தகு அன்பினில் பிழைத்திடும் என் மனம் நறுமண தூபமாய் உனைச் சேரும் |