காணிக்கைப்பாடல்கள் | இறைவன் படைத்த உலகம் |
இறைவன் படைத்த உலகம் நானும் அவரின் செல்வம் இயற்கை தந்த கனிகளோடு என்னைத் தருகின்றேன் (2) மலரோடு மலராக நானும் இணைந்தேன் கனியோடு கனியாக நானும் கனிந்தேன் சநிசகா மகமபா சாசபாப மகரிசா /2 என்னையே காணிக்கையாய் நானும் தருகிறேன் உம்மையே என்வழியாய் நானும் பகிர்கிறேன் ஏற்று உமது பலியாய் மாற்றுமெந்தன் யேசுவே ஏழைப்பெண்ணின் காணிக்கையாய் என்னைத் தருகிறேன் மெல்கிசதேக் காணிக்கையாய் என்னை மாற்றுமே சநிசகா மகமபா சாசபாப மகரிசா/ 2 குருதி சிந்தி கல்வாரி பலியாய் அர்ச்சித்தீர் குறைகள் நிறைந்த எந்தன் வாழ்வை நிறைவாக்கவே என்னில் எழுந்து என்னை மாற்றும் எந்தன் யேசுவே |