காணிக்கைப்பாடல்கள் | இறைவா என் அன்பே |
இறைவா என் அன்பே உம்மைத் தேடிவந்தேன் மனதார நீ ஏற்கும் இதயக்காணிக்கை என்னிடம் உள்ளதெல்லாம் உமக்கே நான் தருவேன் நாளெல்லாம் என் வாழ்க்கை உமக்கே சொந்தம் இனிவரும் காலம் என் வாழ்க்கை உமக்கே சொந்தம் வண்ண மலர் எடுத்து வந்நு மலர்களை நான் தொடுத்தேன் மன்னருக்கு நான் அளிக்கும் இதயக் காணிக்கை என்னவரின் தேவைகளை எண்ணி எண்ணி ஏற்றவர்க்கு இன்பமாக நான் அளிக்கும் இன்பக் காணிக்கை உன் இல்லம் நான் வந்தேன் உனக்காக எனைத் தந்தேன் - 2 நிறைவான மனதுடனே ஏற்பாய் இறைவா எந்தன் மனம் உனக்கெனவே உள்ளதெல்லாம் உமக்கென்று அள்ளி அள்ளி நான் கொடுக்கும் அன்புக் காணிக்கை கள்ளமில்லா உள்ளங்களை கனிவுடன் எற்றவர்க்கு என்னுயிரை நான் அளிக்கும் உயர்ந்த காணிக்கை மாறாத என் அன்பை உனக்காக நான் தருவேன் - 2 நிறைவாக காணிக்கையை ஏற்பாய் இறைவா எந்தன் உள்ளம் மனம் மகிழ்ந்து வல்ல தேவன் இயேசுவுக்கு அன்புடனே நான் அளிக்கும் ஆசை காணிக்கை என் வாழ்வின் நாயகரே எம்மைக் காக்கும் ஆண்டவரே உமக்கென்று யாம் கொடுக்கும் உண்மைக் காணிக்கை உளமாற எனை ஏற்பாய் இதமாக நான் தருவேன் - 2 நினைவில் உம் தயவில் ஏற்பாய் இறைவா |