Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

காணிக்கைப்பாடல்கள் ஏற்றிடுவீர் எம் காணிக்கைப் பொருளை  
ஏற்றிடுவீர் எம் காணிக்கைப் பொருளை
எமக்காய்ப் பிறந்த நல் இயேசுவே (2)

அன்பாலே உலகை நிரப்பிய அழகே
அளிக்க வந்தோம் எங்கள் இதய அன்பை (2)
ஆவியின் கனிகளைப் பொழிகின்ற தலைவா
தருகின்றோம் தனிப்பதம் பணிந்தே

என் நெஞ்சில் நிம்மதி ஒளிதந்த நிலவே
இன்னுயிர் கலந்த வான்முகிலே (2)
வாழ்வினை பலியாய் மலர்ப்பதம் படைத்தே -2
இறைஞ்சுகின்றோம் பரமனின் திருமுன்

பொன்னோடு போளமும் தூபமும் ஏந்தி
மன்னவர் மூவர் காணவந்தார் (2)
மூவுலகாளும் ஆண்டவர் உமக்கே -2
மனமுவந்தே காணிக்கை தந்தோம்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்