காணிக்கைப்பாடல்கள் | ஏற்றருள் இறைவா ஏற்றருள்வாய் |
மகமகரிஸ கரிஸநி தநிஸ ஏற்றருள் இறைவா ஏற்றருள்வாய் ஒரு மனதாக நாங்கள் அளித்திடும் பலியை திருக் கரம் நீட்டி எம்மை ஏற்றருள் இறைவா ஏற்றருள் இறைவா ஏற்றருள்வாய் (2) மகமகரிஸ கரிஸநி தநிஸ கார்மேகம் சூழ்ந்து மழையாக பெய்து பூ மலர்நது காய் கனிந்து அறுவடை செய்து பார் சூழ்ந்த அலை மோதி வலை வீசி மீனும் புயல் அடித்து காற்றடழுத்த கதிகலங்கி நானும் படைத்தவன் நீயே படைப்புக்கள் நாங்கள் படைத்தவன் உமக்கே படைக்கின்றோம் எமையே (2) மகமகரிஸ கரிஸநி தநிஸ பஞ்சம் பசி பிணி எல்லாம் எமை வாட்டி நின்றால் தஞ்சம் இனி உனதன்றி வேறேது என்றோம் கொஞ்சம் இனி இல்லை எமை முழுதாக தந்தோம் நெஞ்சம் அருள் மொழிந்தெம்மை ஏற்பாய் அருள் தந்தாய் சுமைதாங்கி நீயே சுமையாக நாங்கள் சுமை தாங்கி உமக்கே எம் சுமைகளைத் தருகின்றோம் (2) |