காணிக்கைப்பாடல்கள் | எந்தன் உள்ளம் உம்மில் இணைய |
எந்தன் உள்ளம் உம்மில் இணைய எம்மை உமக்கு தந்தேன் படைப்பின் பொருளை பலியில் பரிசாய் தந்தேன் என் இறைவா -2 உள்ளத்தை தந்தேன் உம்மில் வந்தேன் உம்மில் வந்தேன் உள்ளத்தை தந்தேன் -2 உள்ளதை தந்தேன் உள்ளத்தை கேட்டாய் மலரை தந்தேன் மனதை கேட்டாய் பலியில் தந்தேன் பகிர்வை கேட்டாய் எல்லாம் தந்தேன் என்னை கேட்டாய் -2 உள்ளத்தை தந்தேன் உம்மில் வந்தேன் உம்மில் வந்தேன் உள்ளத்தை தந்தேன் -2 உறவில் மலர உலகை படைத்தாய் மீட்பை அளிக்க மரணம் ஏற்றாய் உன்னெழில் பாதை எம்மில் இணைய வெண்ணிற அப்பமாய் எம்மில் வந்தாய் -2 உள்ளத்தை தந்தேன் உம்மில் வந்தேன் உம்மில் வந்தேன் உள்ளத்தை தந்தேன் -2 |