Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

காணிக்கைப்பாடல்கள் எந்தன் மனம் ஏந்தி வந்தேன்  
 

எந்தன் மனம் ஏந்தி வந்தேன்
உந்தன் பதம் வாழ்வைத் தந்தேன்
ஏற்பாய் இறைவா பரம்பொருளே
தந்திடும் உம் தரிசனம் கண்டிடவே வந்தேன்
தவித்திடும் மனதையே உன்னிடம் தரவந்தேன்

உறவின் நிறைவே உண்மையின் திருவே
உண்மையில் எனைச் சேர்க்க இதயம் தருகின்றேன்
நல்லுறவைத் தேடித் தேடி உலகெங்கும் நான் திரிந்தேன்
உள்ளிருக்கும் உனை உணர நானும் மறந்திட்டேன்
எதை நான் தருவேன் என் அன்பு தெய்வமே
இருப்பதைப் பகிரவந்தேன் அன்பு தெய்வமே
உன்னில் நானும் என்னில் நீயும் இணைந்திடவே வந்தேன்

பற்பல முறைகளிலே பல்வேறு வகைகளிலே
முன்னோர்கள் வாழ்வினிலே இறைவா பேசினீர்
இவ்விறுதி நாட்களிலே இறைமகன் வழியாக
நிறைவாக எம்மோடு பேசும் கடவுளே
நிலைவாழ்வைத் தேடுகிறேன் அன்பு தெய்வமே
திருமகனை பலியாகத் தந்த தெய்வமே
உந்தன் அன்பில் என்னை நீயும் இணைத்திடவே தந்தேன்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்