காணிக்கைப்பாடல்கள் | என்ன தருவேன் இறைவா |
கஸநி ஸஸஸா கஸநி ஸஸஸகஸநி ஸஸஸா கஸநி ஸஸஸா என்ன தருவேன் இறைவா என் இயேசு நாயகா உள்ளம் எனும் கோவிலில் நீ வருவாய் -2 என்னோடு வாழவா என் அன்பு தெய்வமே - 2 எல்லாமே நீ தந்த கொடைதானே - 2 மண்ணில் விளைந்த பொருளை கொண்டு வந்தேன் மனதை முழுவதுமாய் தந்து நின்றேன் கோதுமை மணிபோல நானும் வந்தேன் திராட்சை கொடியோடு இணைந்து நின்றேன் வாழ்வின் வலிகளை வாழ்ந்த நிறைகளை தேற்றிட கொண்டு வந்தேன் தேடி உன்னிடம் வருகிறேன் தருகிறேன் ஏற்றருள்வாய் என் இறைவா ... இறைவா... எல்லாம் தந்தேன் உன்னிடம் தந்தேன் ஏற்பாய் ஏற்பாய் உழைப்பின் வியர்வையை கொண்டு வந்தேன் உழைக்க கற்றுத் தந்தாய் மகிழ்ந்து வந்தேன் மன்னிக்கும் மனதை உந்தன் பாதம் தந்தேன் மாற்றம் காண என்னை முழுதும் தந்தேன் உகந்த பலி என உன் பீடம் நான் வந்தேன் மேலேழும் தூபம் போல் என் மனம் உயர்த்துகிறேன் வருகிறேன் தருகிறேன் ஏற்றருள்வாய் என் இறைவா....இறைவா.. எல்லாம் தந்தேன் உன்னிடம் தந்தேன் ஏற்பாய் ஏற்பாய் |