காணிக்கைப்பாடல்கள் | எம்மை அழைத்தாயே இறைவா |
எம்மை அழைத்தாயே இறைவா எம்மை அளித்தோமே இறைவா நீ தந்த வாழ்வை நாம் தந்தோம் தேவா காணிக்கையாக ஏற்றிடுவாய் - உம் பலிகளுக்காக மாற்றிடுவாய் நிறத்தினில் மனிதரைப் பிரித்தாலும் இரத்தத்தின் நிறமெங்கும் சிவப்பன்றோ ஓடும் இரத்தமும் நீயாவாய் இரத்தத்தின் வடிவில் எமைத் தந்தோம் சமத்துவம் கண்டிட இரத்தம் சிந்துவோம் இறைவா உந்தன் சுவடுகளை உலகினில் எங்கும் காணவில்லை ஏழை மனிதரில் இணைந்துவிட்டால் அப்பத்தின் வடிவில் எமைக் கண்டோம் எளியவர் விடியலில் உமைக் காண்போம் |