காணிக்கைப்பாடல்கள் | ஏழை என்னை காணிக்கையாய் |
ஏழை என்னை காணிக்கையாய் உந்தன் பாதம் கொண்டு வந்தேன் ஏற்றுக்கொண்டு ஆசிதாரும் உந்தன் அன்பால் என்னைக்காரும் பொன்னும் பொருள் இல்லை ஆசி எனக்கில்லை ஏழை உள்ளம் தருகிறேன் நான் என்னை ஆளும் இயேசு நாதா உந்தன் பாதம் சரணம் நானே வைரம் எனக்கில்லை அந்தஸ்தும் இல்லை உந்தன் கிருபையால் வாழ்கின்றேன் நான் உலகம் நிலையில்லை உறவும் நிலையில்லை வாழும் நாட்கள் தருகிறேன் நான் |