காணிக்கைப்பாடல் | 670-வைகறைப் பொழுதுன் |
வைகறைப் பொழுதுன் மலர்ப்பதம் தொழுது தரும் பலிப் பொருளை ஏற்பீர் இறைவா இதயம் ஒன்றே அதை உமக்களித்தேன் ஏழையின் உடமை இதுவன்றோ இனிமேல் வாழ்வது நானல்ல - என்னில் யேசு நீர் வாழ்ந்திடுவீர் எந்நாளும் உலகின் மாயை அனைத்தையும் தறந்தேன் உடைமை என்றே உமைத் துறந்தேன் உள்ளத்தின் நிறைவால் வாய் பேசும் உந்தன் உறவினால் நான் வாழ்வேன் எந்நாளும் பலன்களின் உணர்வும் இதயத்தின் துடிப்பும் புத்தியும் மனதும் உமக்கடிமை வறுமையம் வளமும் வாழ்வினிலே - நான் வடிக்கும் கண்ணீரும் என பலியே |