Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  669-வேண்டுதல் யாவையும்  


வேண்டுதல் யாவையும் கேட்டிடுவாய் - தரும்
வேள்வியை மனமுவந்தேற்றிடுவாய் இறைவா

அருள் நிறை உள்ளமும் பொருள் நிறை வாழ்வும்
அமைந்திட வேண்டும் நீ அருள் தர வேண்டும் (2)
அனைத்திலும் மேலாய் ஆண்டவன் உன்னை நான் - 2
ஆயுள் உள்ளவரை பாடும் வரம் வேண்டும்
பாடிப் பாடியே போற்றும் வரம் வேண்டும்

மணம் மிகு மலரும் மனம் நிறை அன்பும்
மகிழ்ந்துனைப் புகழ்ந்து நின் மலரடி படைத்தோம் (2)
மாதவனே இந்த மானிடர் செய்த - 2
பாவம் யாவையும் பொறுத்தருள் செய்வாய்
புதிய வாழ்வுதனை மகிழவும் தருவாய்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்