காணிக்கைப்பாடல் | 665-வாழ்வின் நிறைவே |
வாழ்வின் நிறைவே பலியென உணர்ந்து பலிப்பொருள் ஆனேன் தலைவா என் பலியிதை ஏற்பாய் இறைவா வாழ்வில் சோதனையும் வேதனையும் தாழ்நிலை தள்ளிடும் வேளையிலும் வளமையும் வறுமையும் எனதாக்கி வளர்ந்திடும் உறவாக உனை ஏற்று வாடும் உயிர்களை வளமாக்க தருகின்றேன் வாழ்வைப் பலியாக பொருளினை தேடிவிட்டு திருப்பலியின் பொருளினை மறந்திடும் மாந்தரிடையே பெறுவதினும் தருவதே மேலாக்கி பிறர் நலம் ஒன்றையே வாழ்வாக்கி உலகில் வாழ்வையே பலியாக புனிதனுன் மலரடி படைக்கின்றோம் |