Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  664-வாழ்க்கை உந்தன் காணிக்கை  

வாழ்க்கை உந்தன் காணிக்கை - அதன்
வாழ்வு தாழ்வு அனைத்தையும் நான்
தந்தேன் காணிக்கை - 2

இரசத்தினில் கலந்திடும் நீர்த்துளிபோல்
உன்னில் நான் ஒன்றாக வேண்டுகிறேன் ஆ ஆ ஆ
ஒரு திரியாய் என்னை ஏற்றி வைப்பாய்
ஒரு மலராய் என்னை மாற்றி வைப்பாய்
என் பலி ஏற்பாய் தேவா - 2

கரம் தனில் ஏந்திய காணிக்கை போல்
உன்னில் நான் ஒன்றாக வேண்டுகிறேன் ஆ ஆ ஆ
என் வாழ்வும் உன்னிலே மலர வைப்பாய்
என் பணி உன்னிலே சிறக்கச் செய்வாய்
என் பலி ஏற்பாய் தேவா - 2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்