Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  663-மனமென்னும் பொன் தட்டில்  

மனமென்னும் பொன் தட்டில் இறைவா - எம்
காணிக்கை தந்திட்டோம் ஏற்பாய்

புகை போல மறைகின்ற வாழ்வில் - வெறும்
புகழ் தேடிப் பலனேதும் இல்லை - 2 - தூபப்
புகை போல உயர்ந்து நாங்கள் - என்றும்
புனிதராய் வாழ்ந்திட அருள்வாய்

அழகோடு இருந்தாலும் பிள்ளை - அது
அழுக்கோடு இருந்தாலும் பிள்ளை - 2 - என்று
பழச்சாறில் கலக்கின்ற நீர் போல் - இன்று
பாவியை அழைக்கின்ற உமக்கு

தாவீதின் ஊரினிலே கிறிஸ்து - கன்னித்
தாயிடம் பிறந்திட்ட நாளில் - 2 - புகழ்
பாவோடு இதயத்தின் மகிழ்வை - தினம்
பலியாகும் இயேசுவில் தந்தோம்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்