காணிக்கைப்பாடல் | 662-மலராய் என் மனமதனை |
மலராய் என் மனமதனை மன்னவா உன்பதம் சேர்த்தேன் மகிழ்வாக நீ அதனை மணம் வீசக் கரம் எடுப்பாய் பலியென வாழ்வினையே பரிசாகத் தருகின்றேன் - 2 பழிகளைக் களைந்து பரிசுத்தமாக்கி - 2 பரமனே உனதென ஏற்றிடுவாய் பாமரன் எனக்குயிர் ஊற்றிடுவாய் பதபா கபகா ரிகரி, ஸரிஸா - தஸரிஸபா மலரென வாழ்வினையே மணம் வீசத் தருகின்றேன் - 2 மனதினை ஏற்று மாசுகள் போக்கி - 2 மன்னனே உனதென ஏற்றிடுவாய் மகிழ்வுடன் மானிடன் ஆக்கிடுவாய் பதபா கபகா ரிகரி, ஸரிஸா - தஸரிஸபா |