காணிக்கைப்பாடல் | 661-மணிமொழி கலைகளிலே |
மணிமொழி கலைகளிலே உனை வாழ்த்த இணைந்து வந்தோம் மண்தந்த கனிகளையே உன் பதம் படைக்க வந்தோம் ஏற்றருளும் தந்தையே இணைத்தருளும் எம்மையே 2 மணிகளின் மறுவடிவாய் மனுமகன் திருவுடலாய் மாறிடும் கோதுமை நல் அப்பம் தந்தோம் கனிகளின் மறுவடிவாய் திருமகன் குருதியாய் மாறிடும் திராட்சை ரசத்தையும் தந்தோம் கனிமணி இவற்றுடன் கண்மணி எம்மையும் கனிவுடன் ஏற்றருளும் தியாகத்தின் திருவுருவாய் ஏழ்மையின் உறைவிடமாய் பிறர்க்கென வாழ்ந்திடும் வாழ்வையும் தந்தோம் விண்ணெழும் புகைவடிவாய் என் மனவாழ்வையும் விண்ணவன் பதமே பணிந்தே தந்தோம் கனிமணி இவற்றுடன் கண்மணி எம்மையும் கனிவுடன் ஏற்றருளும் |