Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  660-மண்ணிற்கு விண்ணதின்  


மண்ணிற்கு விண்ணதின் காணிக்கை
மேகங்கள் சிந்திடும் நீர்த்துளியோ
கண்ணிற்கு எதுவோ காணிக்கை
கடவுள் படைப்பின் மாட்சிமை

ஏவையின் மைந்தனாம் ஆபேலும்
ஆடுகள் பலியை ஈந்தனன்
பூவை மரி மைந்தன் இயேசுவும்
செம்மறிப் பலியும் ஆகினார் - 2

தாவீதின் புதல்வன் சாலமோன்
ஆலயம் கட்டியே பலியிட்டான்
ஆவலில் அவன்போல் நாமிங்கு
ஆலயம் எழுப்பிப் பலியிட்டோம் - 2

புனிதர் பலரின் வாழ்வினில்
புனித முறையில் பலியிட்டார்
இனிது அவர்தம் பாதை வழி
இம்மையில் நாமும் செல்லும் வழி 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்