காணிக்கைப்பாடல் | 657-பொன்னும் போளமும் |
பொன்னும் போளமும் என்னிடமில்லை என்னையே உமக்குத் தருகின்றேன் (2) அப்பமும் இரசமும் கொண்டு வந்தேன் - 2 என் ஆன்மீக உணவாய் மாற்றிடுவாய் ஏற்றிடுவாய் எம்மை ஏற்றிடுவாய் இயேசுவின் உருவாய் மாற்றிடுவாய் (2) உழைப்பின் பயனாம் அப்பம் இதோ ஏழைகள் வாழ்ந்திட வளம் தருமே சிந்திடும் கண்ணீர் கிண்ணத்திலே - அதை திராட்சை இரசமாய் தருகின்றேன் துயருறும் மாந்தர் உயர்ந்திடவே தூயவா தயவாய் ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய் எம்மை ஏற்றிடுவாய் இயேசுவின் உருவாய் மாற்றிடுவாய் (2) அன்பில்லா உலகில் அன்புறவை அமைத்திடவே நான் உழைத்திடுவேன் துன்புறும் சோதரர் சுகம் பெறவே - அவர் சுமைகளை நானும் சுமந்திடுவேன் சிந்திடும் கண்ணீர் துடைத்திடவே புதியதோர் உலகம் அமைந்திடுமே ஏற்றிடுவாய் எம்மை ஏற்றிடுவாய் இயேசுவின் உருவாய் மாற்றிடுவாய் (2) |