காணிக்கைப்பாடல் | 651-படைத்தளித்தாய் எந்தன் |
படைத்தளித்தாய் எந்தன் பரம்பொருளே இன்று எடுத்தருளே ஏழை கொடுப்பதனை நறுமணம் வீசும் மலர் கொணர்ந்தேன் - 2 நாவிற்கினிய கனி கொணர்ந்தேன் - 2 கரங்களை விரித்தே எனையளித்தேன் - 2 கனிவுடன் ஏற்பீர் பரம்பொருளே வெண்ணிறப் பொருளாம் அப்பமிதோ செந்நிறப் பழரச பானமிதோ - 2 அண்ணலே உன் அடி அர்ப்பணமே - 2 அன்புடனே இதை ஏற்றருளே வெண்புகை கமழும் தூபமிதோ கண்களில் வடி கண்ணீருமிதோ - 2 வெண்ணிற முல்லை மலர்களிதோ - 2 வேந்தனே விரும்பி ஏற்பாயோ |