காணிக்கைப்பாடல் | 650-படைப்பின் முதல்வா |
படைப்பின் முதல்வா பலிப்பொருள் பாராய் படைத்திடும் எமக்கருள் பரமனே தாராய் உன் நினைவென்னும் மலர் என்னில் மலர்ந்தது - பிறர் அன்பு என்னும் மணம் என்னில் கமழ மலர்கள் தந்தோம் நல்மனதாய் ஏற்பாய் உலகினில் புனித நல் மலரென வைப்பாய் உன் அருளென்னும் ஒளி என்னில் எரிந்து பிழை என்னும் களைதனை எரித்திடவே எண்ணெயிட்டோம் நல்திரியாய் நிலைப்பாய் புண்ணிய வழியினில் நடந்திட அருள்வாய் |