காணிக்கைப்பாடல் | 648-படைப்பு எல்லாம் உனக்கே |
படைப்பு எல்லாம் உனக்கே சொந்தம் நானும் உந்தன் கை வண்ணம் குயில்கள் பாடும் கிளிகள் பேசும் என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே - 2 இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் - 2 அகிலம் என்னும் ஆலயம் நானும் அதிலோர் ஆகமம் - 2 உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே - 2 இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் - 2 வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே! - 2 தந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடுதான் - 2 |