காணிக்கைப்பாடல் | 646-பலியைவிட இரக்கத்தையே |
பலியைவிட இரக்கத்தையே விரும்பும் எங்கள் இறைவா பலியைவிட மேலாக உடைந்த உள்ளம் தந்தோமே உவந்து நீயும் ஏற்பாய் உணவற்றோர்க்கு உணவும் உடையற்றோர்க்கு உடையும் நலமற்றோர்க்கு செபமும் ஆறுதலும் அளித்தேன் எனக்கு யாருமில்லை என்று வாடும் மனங்களில் ஏற்றி வைத்தேன் ஒளியினை இரசவடிவில் ஏற்பாயே உழைப்புக்கேற்ற பலனே இல்லை என்று சோர்;ந்தேன் உழைத்தால் போதும் உமதருள் உடனிருக்கும் என்றீரே உழைப்பும் களைப்பும் இருந்தாலும் ஊக்கத்தோடு வாழ்கிறேன் அனைத்தையுமே தருகிறேன் அப்ப வடிவில் ஏற்பாயே |