காணிக்கைப்பாடல் | 644-பலியின்று தரவந்தேன் |
பலியின்று தரவந்தேன் என் இயேசுவே பிறர்க்காக என் வாழ்வை தருவதின் நினைவாக பலியின்று தரவந்தேன் என் இயேசுவே உறவின்றி தடுமாறி அன்பின்றி உருமாறி உயிர் வாழும் நிலை காண்கின்றேன் உறவாய் அன்பாய் உயிராய் வாழ்வேன் உண்மை அன்பிலே உம்மைக் காட்டுவேன் இழந்த வாழ்வை மீட்கவே பிரிந்த உறவும் இணையவே என்னை மெழுகாக்கி வாழ்வை திரியாக்கினேன் உறவின் தீபங்கள் நாளும் ஏற்றி அன்பின் பலியாய் உமக்கே சாற்றினேன் துயர் இன்றி பிறர் வாழ நிறைவாழ்வு அவர் காண பலியாக எனையே தந்தேன் துயரில் துணையாய் நிறைவில் மகிழ்வாய் உண்மை நண்பனாய் நாளும் வாழுவேன் மலர்ந்த வாழ்வு சிறக்கவே மனித மாண்பு நிலைக்கவே என்னை மெழுகாக்கி வாழ்வை திரியாக்கினேன் உறவின் தீபங்கள் நாளும் ஏற்றி அன்பின் பலியாய் உமக்கே சாற்றினேன் |