காணிக்கைப்பாடல் | 643-பலி செய்ய நானும் வந்தேன் |
பலி செய்ய நானும் வந்தேன் இறைவா பலியாக்க என்னைத் தந்தேன் தலைவா (2) நன்மையை நினைந்து நலம் பல செய்து உம்மைப் பலியாக்கினீர் (2) உண்மையில் நடந்து உயிரையும் தந்து உம்மைப் பலியாக்கினீர் எந்நலம் மறந்து பிறர்நலம் காண என்னைப் பலியாக்குவேன் உன்னிலே இணைந்து உன்பணி தொடர இன்று பலியாக்கினேன் நிறைவினை அடைய குறைகளும் மறைய உம்மைப் பலியாக்கினீர் (2) இறைமொழி சொல்லி மறைவழி செல்ல உம்மைப் பலியாக்கினீர் வறியவர் எளியவர் சுமைகளில் உதவிட என்னைப் பலியாக்குவேன் பகிர்வினில் உறவினில் பாலங்கள் அமைத்திட இன்று பலியாக்கினேன் |