காணிக்கைப்பாடல் | 642-பலி செய்ய உன் பாதம் |
பலி செய்ய உன் பாதம் வருவேனையா உள்ளம் விலை சொன்ன பலி ஏது தருவேனையா தலைவா என் கரம் மீதில் பொருளேதையா உந்தன் மலையாக நீ தந்த அருள்தானையா புவி மீது கதிர் தந்த மணியானது - இங்கு புவி மீட்பின் உயிர் தங்கும் உடலாகிடும் செடி நின்று கொடி தந்த கனியானது உந்தன் உடல் நின்று ஓடும் செந்நீராகிடும் மண் கொண்ட மணிதானும் மடிந்தாகணும் - என் கண்கண்ட கனி தானும் பிழிந்தாகணும் துன்பத்தில் கண்ணீரும் வழிந்தாகணும் - வான் இன்பத்தை ஊற்றாகப் பொழிந்தாகணும் |